உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

 தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: மத்திய அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாய முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., யு.டி.யு.சி., விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பங்கேற்றனர். தொலை தொடர்பு, வங்கிகள், ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். சிறு, குறு தொழில்களுக்கு எதிராகவும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதர வாகவும் செயல்படுவது கண்டிக்கதக்கது. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உற்பத்தி விலையை விட 50 சதவீதம் அதிக விலையும், குறைந்தபட்ச ஆதார விலையும் நிர்ணயம் செய்வது உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை