உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே போக்குவரத்து நெரிசல்: ஆமை வேகத்தில் புது பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி

பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே போக்குவரத்து நெரிசல்: ஆமை வேகத்தில் புது பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி

ராமநாதபுரம் நகராட்சி புது பஸ் ஸ்டாண்டில்இருந்து சென்னை, மதுரை, துாத்துக்குடி, கும்பகோணம், புதுக்கோட்டை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட பல வெளி மாவட்டங்கள், உள்ளூர் பகுதிகளுக்கு 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டது. கட்டடம் சேதம், போதிய இடவசதியின்மையால் 2023 ஆக.3ல் ரூ.20 கோடியில் புது பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணிகள் 16,909 சதுர அடியில் கட்டுமானப் பணிகள் துவங்கி நடக்கிறது. அப்போது பழைய பஸ் ஸ்டாண்ட் மற்றும் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் மூலக்கொத்தளம் வீட்டுவசதி வாரியம் இடத்தில்அமைக்க முடிவு செய்தனர்.ஆனால் வீட்டுவசதி வாரியம் இடம் தராததால்ஓராண்டாக பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. அங்கு இட நெருக்கடி உள்ளது. மேலும் போதுமான குடிநீர், கழிப்பறை வசதியில்லை. பஸ்கள்உள்ளே செல்லும் போதும், வெளிய வரும்போது ரயில்வே பீடர் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக பள்ளி, கல்லுாரி, அலுவலக நேரங்களில் பயணிகள் பஸ் ஏறி, இறங்க சிரமப்படுகின்றனர். எனவே ஆமை வேகத்தில் நடைபெறும்புது பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப் பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் அஜிதாபர்வின் கூறுகையில், புது பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப் பணியில் கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. பஸ் நிறுத்தம்,தரைத்தளம் பணிகள் நடக்கிறது. தாமதப்படுத்தாமல் விரைந்து முடிக்க ஒப்பந்ததாருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளோம். நவ.,க்குள் அனைத்து பணிகளையும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை