விவசாயிகள் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே உலையூர் கிராமத்தில் உழவர் பயிற்சி மையம் சார்பில் கிராம அளவிலான விவசாயிகள் முன்னேற்றக் குழு உறுப்பினர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி நடந்தது. உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். வட்டார வேளாண் உதவி இயக்குனர் கேசவராமன் வரவேற்றார். அப்போது ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, மண்வள மேலாண்மை, உயிர் உரங்கள் பயன்பாடு, தொழு உரங்களின் நன்மைகள், களை மேலாண்மை, ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்தல் பற்றி விளக்கப்பட்டது. விவசாயிகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. உழவர் பயிற்சி நிலைய வேளாண் அலுவலர் சீதாலட்சுமி,வேளாண் அலுவலர் தமிழ் அகராதி உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.