உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டூவீலரில் சென்றவர் பலி

டூவீலரில் சென்றவர் பலி

ராமநாதபுரம், அரியலுார் தேவமங்கலம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் செந்தமிழ்ச்செல்வன் 35. ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியில் ஓட்டலில் தங்கி வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு டூவீலரில் பட்டணம்காத்தான் பகுதியில் உள்ள மதுபானக் கடைக்கு சென்றார். ரோட்டை கடந்த போது நிலைதடுமாறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதித்த டாக்டர் வழியில் இறந்ததாக தெரிவித்தார். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை