உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் கோயிலில் வடிவேலு தரிசனம் மோட்ச தீபம் ஏற்றினார்

ராமேஸ்வரம் கோயிலில் வடிவேலு தரிசனம் மோட்ச தீபம் ஏற்றினார்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடிகர் வடிவேலு மோட்ச தீபம் ஏற்றி தரிசனம் செய்தார்.வடிவேலு தாயார் இறந்து ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு நேற்று ராமேஸ்வரத்துக்கு உறவினர்களுடன் அவர் காரில் வந்தார். கோயில் கிழக்கு நுழைவு வாயில் மண்டபத்தில் தாயார் நினைவாக மோட்ச தீபம் ஏற்றி வைத்தார். பின் சுவாமி, அம்மன் சன்னதிக்கு சென்று தரிசனம் செய்தார். பின் வடிவேலுக்கு கோயில் குருக்கள் பிரசாதம் கொடுத்தனர்.வடிவேலு கூறியதாவது: தாயார் இறந்து ஓராண்டு முடிந்தது. அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டி பிரசித்தி பெற்ற தீர்த்த தலமான இக்கோயிலில் மோட்ச தீபம் ஏற்றி விட்டு தரிசனம் செய்தேன் என்றார். பின் காரில் மதுரை சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை