உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  வல்லபாய் படேல் ஜெயந்தி விழா

 வல்லபாய் படேல் ஜெயந்தி விழா

தேவிபட்டினம்: மாவட்ட மேரா யுவா பாரத் சங்கம் சார்பில் வல்லபாய் படேலின் 150வது ஜெயந்தி விழா ஊர்வலம் தேவிபட்டினம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் துவங்கி புகாரியா மெட்ரிக் உயர்நிலை பள்ளி வரை நடந்தது. ஊர்வலத்தில் சார்தார் வல்லபாய் படேல் நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட இளைஞர் அலுவலர் சம்யேக் ஹெச் மேஸ்ரம், விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகி சுவாமி ருத்ரானந்தா, தொகுதி மருத்துவ அலுவலர் ஜன்னத் யாஸ்மின் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் கலை பண்பாட்டு துறை பகுதி நேர நாட்டுப்புற மாணவர்கள் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ