உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  வந்தே பாரத் ரயிலை பரமக்குடி ஸ்டேஷனில் நிறுத்த வேண்டும்

 வந்தே பாரத் ரயிலை பரமக்குடி ஸ்டேஷனில் நிறுத்த வேண்டும்

பரமக்குடி: பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனை தினந் தோறும் 3300 பயணிகள் பயன்படுத்தும் நிலையில் ஆண்டு வருமானம் 10 கோடி ரூபாயை கடந்துள்ளதால் வரும் நாட்களில் இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில் பரமக்குடி ஸ்டேஷனில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரை வழியாக ராமேஸ்வரம் வரை வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்ற நிலையில், தற்போது காரைக்குடி வழியாக இயங்க உள்ளதாக பட்டியல் வெளியாகி உள்ளது. பரமக்குடியில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நிலையில் முது குளத்துார் உட்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 2 லட்சம் மக்களுக்கு மேல் பரமக்குடி ஸ்டேஷனை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் பகல் நேரத்தில் சென்னை சென்று வர மக்களுக்கு வந்தே பாரத் ரயில் வரப்பிரசாதமாக அமையும். இதன் மூலம் 6 மணி நேர பயணத்தில் ராமேஸ் வரம், சென்னை செல்ல முடியும். தற்போது வெளியாகி உள்ள அட்டவணையின் படி எழும்பூர், தாம் பரம், விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி என 36 கி.மீ., இடைவெளியில் நிறுத்தங்களும், காரைக்குடி, சிவகங்கை இடையே 40 கி.மீ., தொலைவில் நிறுத்தமும் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிவகங்கை, ராமநாதபுரம் இடையே 80 கி.மீ., இடைவெளியில் பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. ஆகவே சிவகங்கைக்கு அடுத்து பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன் 44 கி.மீ., மற்றும் ராமநாத புரம் ஸ்டேஷன் 36 கி.மீ., தொலைவில் உள்ளது. ஆகவே பரமக்குடியின் வருவாய் மற்றும் மக்கள் பயன்படுத்தும் நிலையை கருத்தில் கொண்டு வந்தே பாரத் ரயில் பரமக் குடியில் நின்று செல்ல வேண்டும். முக்கியமாக தினம் தோறும் 1000 பேர் மட்டுமே பயன்படுத்தும் அருகில் உள்ள ரயில்வே ஸ்டேஷனில் நிற்கும் நிலையில், பரமக்குடியில் நிறுத்தம் தேர்வு செய்ய தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும், என ரயில்வே பயனாளர்கள், பொதுநல அமைப்பினர், அனைத்து பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ