| ADDED : பிப் 01, 2024 07:06 AM
கீழக்கரை : -கீழக்கரை செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லுாரியில் நுாலகம் மற்றும் தொழில் நுட்ப அறிவியல் துறை சார்பில் 'வாசிப்போம் நேசிப்போம்,' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி மாணவர்களுக்கு துறை மற்றும் பொது அறிவு சார்ந்த நுால்கள் பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது.கல்லுாரி முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார். நுாலகர் பால்ராஜ் 'வாசிப்போம் நேசிப்போம்' என்ற தலைப்பில் பேசினார். மாணவர்கள் ஒவ்வொருவரும் நுாலகத்தின் வழியாக பல்வேறு விஷயங்களை கற்றுக் கொள்ளவும், நாளிதழ்கள், வார இதழ்கள் உள்ளிட்டவைகளின் மூலமாக பல்வேறு பொது விஷயங்களை அறிந்து கொள்ளவும் பயனுள்ளதாக அமைகிறது என விளக்கம் அளிக்கப்பட்டது.கணிதத்துறை தலைவர் காசிக்குமார், ஆங்கிலத்துறை பேராசிரியர் சுலைமான் உட்பட ஏராளமான பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். தினமலர் நாளிதழின் பட்டம் இதழை கல்லுாரி மாணவர்கள் ஆர்வமுடன் வாசித்தனர்.