உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கருணை அடிப்படை பணி நியமனம் மறுப்பு கிராம உதவியாளர் சங்க மாநில தலைவர் வருத்தம்

கருணை அடிப்படை பணி நியமனம் மறுப்பு கிராம உதவியாளர் சங்க மாநில தலைவர் வருத்தம்

ராமநாதபுரம்:கிராம உதவியாளர் பணியின் போது இறந்தால் அவரது குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டது.தற்போது இந்த சலுகை மறுக்கப் படுவதாக தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் மாநில சங்கத்தின் மாநில தலைவர் முத்தையா தெரிவித்தார்.ராமநாதபுரத்தில் நடந்த கிராம உதவியாளர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது:கிராம உதவியாளர்கள் பணியின் போது இறந்தால் அவரது குடும்பத்தினருக்குகருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவது வழக்கம். ஆனால் அரசாணை 33ல் கருணை அடிப்படையில் பணி நியமனம் மறுக்கப்படுகிறது. இதனால் 300க்கு மேற்பட்டகுடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவேஅந்த அரசாணையில் இருந்து கிராம உதவியாளர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்.குறிப்பாக 2017-2018ல் பதவி உயர்வு அறிவிப்பு காலாவதி ஆக்கியதை கண்டித்தும், 2023-24 ல் கிராம உதவியாளர்கள் வி.ஏ.ஓ., பதவி உயர்வில் 2 பணியிடங்களுக்கு ஒரு பணி இடம் வழங்கியதை கண்டித்தும் முதற் கட்டமாக உண்ணாவிரதப் போராட்டத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் நடத்தி வருகிறோம். தொடர்ந்துபிப்.19ல் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம் நடக்கிறது. அதற்குள் மாநில, மாவட்ட நிர்வாகம் அழைத்து பேசாவிட்டால் மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை