உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அடிப்படை வசதிக்கு ஏங்கும் மலரி கிராம மக்கள் ரோடும் இல்ல.. குடிநீரும் வரல...

அடிப்படை வசதிக்கு ஏங்கும் மலரி கிராம மக்கள் ரோடும் இல்ல.. குடிநீரும் வரல...

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே மலரி கிராமத்தினர் ரோடு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக பல ஆண்டுகளாக போராடும் நிலையில் விடியல் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் மக்கள் உள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் கொட்டகுடி ஊராட்சி மலரி கிராமத்தில்60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் ரோடு பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத நிலையில் ரோட்டில் ஜல்லி கற்கள் பெயர்ந்து ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. லேசான மழை பெய்தாலே வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் கிராமத்தினர் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். இதனால் அவசர மருத்துவ சேவை, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் என கிராமத்தினர் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.மேலும் இந்த கிராமத்திற்கு ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் திட்டம், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் என குடிநீர் திட்டங்கள் காட்சி பொருளாக மட்டுமே உள்ளது. கிராமத்திற்கு குடிநீர் சப்ளை இல்லாததால் வெளியூர்களில் இருந்து டிராக்டர்களில் விற்பனை செய்யப்படும் பாதுகாப்பற்ற குடிநீரை குடம் ரூ.15 கொடுத்து பயன்படுத்தும் அவலநிலையில் உள்ளனர்.எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தினர். அப்பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரன் கூறியதாவது:பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கிராமத்திற்கு செல்லும் ரோடு சீரமைக்கப்படவில்லை. குடிநீரும் முறையாக வருவதில்லை. இதனால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளோம். இதுகுறித்து நாளிதழ்களில் செய்தி வரும் போது மட்டும் அதிகாரிகள்ஊருக்கு வந்து அடிப்படை தேவைகளை நிறைவேற்றியதாக போட்டோ எடுத்துச் செல்கின்றனர். நிரந்தர தீர்வு ஏற்படுத்தஅதிகாரிகள் முன்வருவதில்லை. எனவே, கலெக்டர் தனிக் கவனம் செலுத்தி அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி