டாஸ்மாக் கடை திறக்ககிராம மக்கள் எதிர்ப்பு
ராமநாதபுரம்: தொண்டி அருகே பெருமானேந்தலில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.பெருமானேந்தலில் பள்ளி, அய்யானார் கோயிலுக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்நிலையில் ஜன.,25ல் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு செய்தனர். அதனை மக்கள் தடுத்துள்ளனர்.டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும். எனவே டாஸ்மாக் கடை செயல்பட தடைவிதிக்க வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.