உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விஸ்வகர்மா ஜெயந்தி விழா

விஸ்வகர்மா ஜெயந்தி விழா

ரெகுநாதபுரம் : விஸ்வகர்மா என்பவர் தெய்வீக கட்டடக் கலைஞர் மற்றும் கைவினைஞர் தெய்வம் ஆவார். விஸ்வம் என்றால் பெரிய, கர்மா என்றால் செயல் அல்லது தொழில் என்று பொருள்படும். ரெகுநாதபுரம் ஏகாம்பர சிவன் கோயில் வளாகத்தில் விஸ்வகர்மா சமுதாய மக்கள் நடத்திய 7ம் ஆண்டு பிரம்ம ஜெயந்தி விழா நடந்தது. ரெகுநாதபுரத்தில் உள்ள ஏகாம்பர சிவன் கோயில் வளாகத்தில் விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாலையில் ஏராளமான பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை நடந்தது. காலை 8:00 மணிக்கு ரெகுநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள விநாயகர் கோயிலில் இருந்து கைலாய வாத்தியங்கள் முழங்க சிவன் கோயில் வரை ஊர்வலமாக வந்தனர். ஏகாம்பர சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. காலை 10:00 மணிக்கு ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்ற திருவாசகம் முற்றோதல் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விஸ்வகர்மாவின் உருவப்படத்திற்கு மலர் துாவி வழிபாடு செய்தனர். பெண்கள் பொங்கல் வைத்தனர். விழா ஏற்பாடுகளை ஆசாரி சங்கத் தலைவர் ராஜேந்திரன், சமுதாயத் தலைவர் மங்களநாதன் மற்றும் ரெகுநாதபுரம் விஸ்வகர்மா விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை