உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  படிவம் பூர்த்தி செய்ய வாக்காளர்கள் தவிப்பு

 படிவம் பூர்த்தி செய்ய வாக்காளர்கள் தவிப்பு

திருவாடானை: திருவாடானை தொகுதியில் படிவங்களை பூர்த்தி செய்ய முடியாமல் வாக்காளர்கள் தவிக்கின்றனர். இந்திய தேர்தல் கமிஷன் அறிவிப்பின் படி தமிழகம் முழுவதும் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நவ.,4 ல் துவங்கியது. திருவாடானை சட்டசபை தொகுதியில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 520 ஆண்கள், 1 லட்சத்து 52 ஆயிரத்து 106 பெண்கள், 25 திருநங்கைகள் என 3 லட்சத்து 2651 வாக்காளர்கள் உள்ளனர். 95 சதவீதம் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்பப் பெறும் பணி நடந்து வருகிறது. பி.எல்.ஓ.,க்கள் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை ஆன்லைன் வாயிலாக பதிவேற்றம் செய்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், படிவம் நிரப்புவதில் ஏராளமான சந்தேகங்கள் உள்ளன. 2002க்கு முன்பும் பின்பும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து 2002ல் மட்டும் பெயர் இல்லாத வாக்காளர்கள் படிவத்தை எப்படி நிரப்புவது என்று தெரியவில்லை. வேறு மாவட்டங்களில் இருந்து இங்கு நிரந்தரமாக குடியேறிய பிறகு 2002ல் அந்த மாவட்டத்தில் இருந்த போது பாகம் எண், வரிசை எண், தொகுதி எண் கேட்கப்பட்டுள்ளது. 23 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அதற்கான எண் தெரியவில்லை. ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்களுக்கும் பதில் தெரியவில்லை. படிவம் வழங்குவதிலும் திரும்ப வாங்குவதில் மட்டுமே ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஓட்டு சாவடி செயல்படும் இடங்களில் படிவம் நிரப்புவதற்கு பயிற்சி பெற்ற ஊழியர்களை அங்கு பணியமர்த்த வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ