கோடைகாலம் எதிரொலி இளநீர் விலை உயர்வு
கீழக்கரை: கோடை வெயில் அதிகரிப்பால் திருப்புல்லாணி, கீழக்கரை, சிக்கல், சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் இளநீர் விலை அதிகரித்துள்ளது.தற்போது கோடை காலத்தில் அதிகளவு இயற்கை பானங்களை விரும்பி அருந்துகின்றனர். இளநீர் விற்பனை ரோட்டோரங்களில் நடக்கிறது. தாகம் தீர்க்கவும் வெயிலின் தாக்குதலில் இருந்து தப்பிக்கவும் பெரும்பாலானோர் இளநீர் வாங்கி பருகுகின்றனர்.கோவை, பொள்ளாச்சி, தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சரக்கு லாரிகளில் இருந்து மொத்தமாக வாங்கி வைத்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக விற்பனை செய்யப்படுகிறது. ரூ.70 முதல் 80 வரை இளநீர் விற்பனை செய்யப்படுகிறது.கடந்த ஆண்டு ரூ.60க்கு விற்ற இளநீர் தற்போது ரூ.10 அதிகரித்து ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய் விலை உயர்வும் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.