உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ஒன்றிய அலுவலகங்களில் கோடவுன் வசதியின்றி வீணாகும் பொருட்கள் நிதி இழப்புக்கு யார் பொறுப்பு

 ஒன்றிய அலுவலகங்களில் கோடவுன் வசதியின்றி வீணாகும் பொருட்கள் நிதி இழப்புக்கு யார் பொறுப்பு

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கோடவுன் வசதியின்றி கட்டு மானப் பொருட்கள் வீணாகும் நிலை தொடர்கிறது. இதனால் அரசின் நிதி வீணடிக்கப்படுவது அதி கரித்துள்ளது. ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மூலம் கிராமப்புறங்களுக்கு அனைத்து வகையான திட்டங்களும் செயல் படுத்தப்படுகிறது. இதன்படி பிரதமர் திட்டம் துவங்கி மாநில அரசின் வீடு கட்டுதல், ரோடு மற்றும் அனைத்து வகையான பணிகளும் நடக்கிறது. இதற்காக சிமென்ட் மூடைகள், முறுக்கு கம்பி கள், பைப் உள்ளிட்ட பொருட்கள் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு அலுவலக வளாகங்களில் வைக்கப்படுகிறது. இவற்றை பாதுகாக்க 20 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டட வசதி செய்யப்பட்டது. தற்போது பரமக்குடி, போகலுார், நயினார் கோவில் உட்பட அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகங்களிலும் கட்டடம் சேதம் அடைந்துள்ளது. மேலும் போதிய இடவசதியின்றி மழை, வெயிலுக்கு மத்தியில் கம்பி, சிமென்ட் உள்ளிட்டவை வைக்க நேரிடுகிறது. இதனால் கம்பி பொருட்கள் அனைத்தும் துருப்பிடித்து வீணாவது தொடர்கிறது. ஆகவே அரசின் நிதி பொதுமக் களுக்கு பயன்படும் வகையில் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ