உள்ளூர் செய்திகள்

ஆட்டோ மோதி பெண் பலி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் வில்லுாண்டி தீர்த்தம் சேர்ந்த அப்துல்மஜீத் மனைவி சரிபா 58. இவர் நேற்று ராமேஸ்வரம் முஸ்லிம் தெருவில் உள்ள வீட்டுக்கு வேலைக்கு செல்ல அரசு டவுன் பஸ்சில் ராமேஸ்வரம் டவுன் போலீஸ் ஸ்டேஷன் அருகில் இறங்கினார். பின்னர் சாலையை கடந்து சென்ற போது, ராமேஸ்வரம் திட்டகுடியில் இருந்து பஸ் ஸ்டாண்ட் சென்ற ஆட்டோ எதிர்பாராமல் மோதிய விபத்தில் சரிபா பலியானார். ராமேஸ்வரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து ஆட்டோ டிரைவர் செல்வத்தை 42, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ