மேலும் செய்திகள்
பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
10-Aug-2025
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் அன்னை ஸ்கொலாஸ்டிகா பெண்கள் கல்லுாரியில் பட்ட மளிப்பு விழா நடந்தது. நேற்று கல்லுாரி வளாகத்தில் நடந்த பட்ட மளிப்பு விழாவில் கல்லுாரி தலைவர் அமுதா தியோஸ் தலைமை வகித்து சிறப்பு விருந்தினர்களை வரவேற்று பேசினார். முதல்வர் அனிபெர்பெட் சோபியா சிறப்புரை ஆற்றினார். இக்கல்லூரியில் முதன்முதலாக 3 ஆண்டுகள் பட்டப்படிப்பு முடித்து செல்லும் 150க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழாவில் கல்லுாரி செயலாளர் ரூபி, ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் சேசுராஜா, பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
10-Aug-2025