உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரயில் மோதி தொழிலாளி பலி 

ரயில் மோதி தொழிலாளி பலி 

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் சேது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் சலுான் கடை தொழிலாளி நாகசாமி பலியானார்.சத்திரக்குடியை சேர்ந்த நாகசாமி 58. இவர் பாண்டியூரில் உள்ள சலுான் கடையில் தங்கி வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று அதிகாலை 3:30 மணிக்கு ராமநாதபுரத்தில் உள்ள எம்.எஸ்.கே., நகர் பகுதியில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் சென்றபோது சேது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். இறந்தவருக்கு மங்களேஸ்வரி என்ற மனைவியும், அபிநயா என்ற மகளும் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி