உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் ஊருணியில் குளித்த இளம் தம்பதி பலி

ராமநாதபுரத்தில் ஊருணியில் குளித்த இளம் தம்பதி பலி

ராமநாதபுரம்; ராமநாதபுரம் அருகே காட்டூரணியில் ஊருணியில் குளித்த இளம் தம்பதி நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.காட்டூரணி வைகைநகரைச் சேர்ந்தவர் கார்த்திக்ராஜா 27. மதுரையைச் சேர்ந்தவர் ஷர்மிளா 23. இவர்களுக்கு இரு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இருவரும் நேற்று மாலை 5:30 மணியளவில் வீடு அருகில் உள்ள ஊருணியில் குளிக்கச் சென்றனர். இருவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில் ஊருணியில் ஆழமான பகுதிக்கு சென்ற போது சிக்கி இருவரும் பரிதாபமாக இறந்தனர். வெகு நேரமாகியும் இருவரும் வீடு திரும்பாததால் உறவினர்கள் ஊருணிக்கு சென்ற போது இருவரையும் காணவில்லை. பிறகு தீயணைப்புத்துறை வீரர்கள் இரவு 8:45 மணிக்கு ஊருணிக்குள் இறங்கி தேடி இருவரது உடல்களையும் மீட்டனர்.கார்த்திக்ராஜா தாய்லாந்தில் வேலை செய்து வந்த நிலையில் திருமணத்திற்காக விடுப்பு எடுத்துக் கொண்டு 3 மாதங்களுக்கு முன்பு தான் ஊருக்கு வந்துள்ளார். இரு மாதங்களுக்கு முன் திருமணம் செய்த இளம்தம்பதி இறந்தது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி