உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வீடு புகுந்து திருடிய இளைஞர் கைது

வீடு புகுந்து திருடிய இளைஞர் கைது

கமுதி: கமுத அருகே சின்ன உடப்பங்குளத்தை சேர்ந்த பாலு மகன் தாஸ் வீட்டை பூட்டி விட்டு இப்பகுதியில் உள்ள கோயில் கும்பாபிஷேகத்திற்கு சென்றுள்ளார். பின் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த வெள்ளி நகைகள் மற்றும் பணம் திருடு போனது தெரிய வந்தது. இதையடுத்து மண்டலமாணிக்கம் போலீசார் விசாரித்தனர். அதே பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் கார்த்திக்குமார் 20, கைது செய்யப்பட்டார். அவரிடம் வீட்டில் திருடிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை