உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / லஞ்ச தாசில்தார் சஸ்பெண்ட்

லஞ்ச தாசில்தார் சஸ்பெண்ட்

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 67; இவரது நிலம், திண்டிவனம் - நகரி ரயில் திட்டத்திற்காக கையகப் படுத்தப்பட்டது. இதற்கு இழப்பீடாக, 6.27 லட்சம் ரூபாயை அரசு வழங்கியது. இதற்காக அவர் சமர்ப்பித்த உண்மை ஆவணத்தை திருப்பித்தர, ராணிப்பேட்டையை சேர்ந்த திண்டிவனம் - நகரி புதிய ரயில்வே நிலம் கையகப்படுத்துதல் தாசில்தார் மதிவாணன் லஞ்சம் கேட்டார். கடந்த, 31ல், 4,000 ரூபாயை லஞ்சமாக பெற்றபோது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை 'சஸ்பெண்ட்' செய்து, ராணிப்பேட்டை கலெக்டர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை