மேலும் செய்திகள்
அரக்கோணம் அருகே ரயிலில் புகை
6 hour(s) ago
காலாவதி கேக் சாப்பிட்ட பள்ளி மாணவன் மரணம்
24-Sep-2025
பட்டா பெயர் மாற்ற லஞ்சம் சர்வேயர் சிக்கினார்
22-Sep-2025
சாமியார் வேடத்தில் சிக்கிய குற்றவாளி
13-Sep-2025
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை அருகே, உடலில் தசையை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்தி, வேண்டுதல் வைக்கும் வினோத திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள், தங்கள் உடலிலுள்ள தசையை அறுத்து வழிபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், புளியங்கன்னு கிராமத்திலுள்ள கிராம காவல் தெய்வமான, மண்டி அம்மன் ஆலய திருவிழா நடக்கிறது. நேற்று, 2வது நாள் திருவிழாவில், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டி அம்மன், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடந்தது. அப்போது பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையிலும், வேண்டுதல் வைக்கும் வகையிலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர், தங்கள் உடல் சதையை, நெற்றி, கால், நெஞ்சு, வயிறு போன்ற பகுதிகளிலிருந்து அறுத்து வழிபாடு நடத்தினர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
6 hour(s) ago
24-Sep-2025
22-Sep-2025
13-Sep-2025