உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / மனநிலை பாதித்த சிறுமி பலாத்காரம் போக்சோவில் தொழிலாளி கைது

மனநிலை பாதித்த சிறுமி பலாத்காரம் போக்சோவில் தொழிலாளி கைது

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை அருகே, பசிக்கு உணவு கேட்ட மனநிலை பாதித்த சிறுமியிடம், உணவு அளிப்பதாக கூறி அழைத்து சென்று பலாத்காரம் செய்த தொழிலாளியை, போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம், புளியங்கன்னு அடுத்த நவ்லாக் பகுதியை சேர்ந்தவர் பெயின்டர் குமரேசன், 42. இவரிடம், பசிக்கு உணவு கேட்ட மன நிலை பாதித்த, 12 வயது சிறுமியிடம், உணவு அளிப்பதாக கூறி அழைத்து சென்று, நேற்று முன்தினம் பலாத்காரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், சிறுமியின் உடல் நிலை பாதிக்கப்பட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்தபோது பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து சிறுமியின் பெற்றோர், ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரித்து, குமரேசனை போக்சோவில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை