உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / நடிகர் விஜய் கட்சி நிர்வாகிகள் மோதல்

நடிகர் விஜய் கட்சி நிர்வாகிகள் மோதல்

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த மேல்வெங்கடாபுரத்தைச் சேர்ந்தவர் அஜீத், 20. இவர், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக கட்சியில், கிளை பொறுப்பாளராக உள்ளார். அதேபோல, கொடைக்கல்லை சேர்ந்த ஏழுமலை, மாவட்ட பொறுப்பில் உள்ளார். கட்சியில் புதிய உறுப்பினர்களை அஜீத் சேர்த்து வந்தார். இதையறிந்த ஏழுமலை, புதிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகளை தன் மூலமாக தான், அவர்களுக்கு வழங்க வேண்டுமென, அஜீத்திடம் கூறி வந்தார்.இது தொடர்பாக, கடந்த சில நாட்களுக்கு முன் இருவருக்கும் வாக்குவாதம்ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஏழுமலை மற்றும் அவரது ஆதர வாளர்கள், நேற்று முன்தினம் இரவு, அஜீத்தின் வீட்டிற்கு சென்று, ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் பைக்கை சேதப்படுத்தினர். அஜீத் புகார் படி, கொண்டபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை