உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / வங்கி ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து மோசடி

வங்கி ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து மோசடி

ஆற்காடு:ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த விலாரி கிராமத்தைச் சேர்ந்தவர் நமசிவாயம், 56; ஆற்காடு கோட்ட நெடுஞ்சாலை அலுவலகத்தில் சாலை பணியாளர். ஆற்காட்டிலுள்ள ஒரு வங்கி ஏ.டி.எம்.,மில், 24,000 ரூபாய் எடுத்தார். தொடர்ந்து, மினி ஸ்டேட்மென்ட் பெற, மீண்டும் ஏ.டி.எம்., கார்டை மெஷினில் சொருகினார்; ஸ்டேட்மென்ட் வரவில்லை.அப்போது அங்கிருந்த ஒருவர், அவருக்கு உதவுவது போல நடித்து, வேறு ஏ.டி.எம்., கார்டை கொடுத்துவிட்டு, நமசிவாயத்தின் கார்டுடன் அங்கிருந்து நழுவினார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அவரது வங்கி கணக்கிலிருந்து, கிருஷ்ணகிரியிலுள்ள ஏ.டி.எம்.,மில் 56,000 ரூபாய் எடுக்கப்பட்டது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ