உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / கிணற்றில் மிதந்தஆண் சடலம் மீட்பு

கிணற்றில் மிதந்தஆண் சடலம் மீட்பு

ஆர்.கே.பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் துளசிராமன், 47. இவர், சில நாட்களுக்கு முன் மாயமானார். இதுகுறித்து சோளிங்கர் போலீசார் விசாரித்து வந்தனர்.நேற்று காலை ஆர்.கே.பேட்டை அடுத்த அய்யனேரி அருகே, பாண்டியநல்லுார் செல்லும் சாலை அருகே உள்ள விவசாய கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக, ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற ஆர்.கே.பேட்டை போலீசார் மற்றும் சோளிங்கர் தீயணைப்பு படை வீரர்கள், கிணற்றில் இருந்து சடலத்தை மீட்டனர். விசாரணையில், உயிரிழந்தவர் துளசிராமன் என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை