மேலும் செய்திகள்
அரக்கோணம் அருகே ரயிலில் புகை
4 hour(s) ago
காலாவதி கேக் சாப்பிட்ட பள்ளி மாணவன் மரணம்
24-Sep-2025
பட்டா பெயர் மாற்ற லஞ்சம் சர்வேயர் சிக்கினார்
22-Sep-2025
சாமியார் வேடத்தில் சிக்கிய குற்றவாளி
13-Sep-2025
ஆற்காடு : ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சாத்துாரை சேர்ந்தவர் சரவணன், 35. மாற்றுத்திறனாளியான இவர், பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி புனிதா; மகன் தீபக், 10; மகள் சரண்யா, 9; சரவணனுக்கு திருமணமாகாத தம்பிகள் சத்தியமூர்த்தி, 28, சவுந்தர், 26, உள்ளனர். இருவரும் ஆற்காடு அருகே, பெட்ரோல் பங்க்கில் பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் இரவு மதுபோதையில், சவுந்தர், சத்தியமூர்த்தி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சரவணன், இருவரையும் சமாதானம் செய்ய முயன்றதில், அவரது தலையில் இரும்பு ராடால் சத்தியமூர்த்தி தாக்கினார். இதில் சரவணன் படுகாயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார். ஆற்காடு தாலுகா போலீசார், சத்தியமூர்த்தியை கைது செய்தனர்.
4 hour(s) ago
24-Sep-2025
22-Sep-2025
13-Sep-2025