உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / பஞ்சாயத்து தலைவியின் செக் பவர் பறித்த கலெக்டர்

பஞ்சாயத்து தலைவியின் செக் பவர் பறித்த கலெக்டர்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி யூனியன் சிறுணமல்லி பஞ்., தலைவியாக ஜோதி, துணைத்தலைவியாக கங்கா உள்ளனர். இருவரிடையே கருத்து வேறுபாட்டால் மாதாந்திர கூட்டம், நலத்திட்ட பணி முறையாக நடக்காமல் நிர்வாகம் முடங்கியது.கடந்த வாரம் நெமிலி பி.டி.ஓ., ஜெயஸ்ரீ, சிறுணமல்லி பஞ்., அலுவலகத்தில் கூட்டம் நடத்தி, தலைவி, துணைத்தலைவி, வார்டு உறுப்பினர்களிடம் விசாரித்தார். அதுதொடர்பான அறிக்கையை, கலெக்டர் மற்றும் திட்ட இயக்குனருக்கு அனுப்பினார். பஞ்., தலைவி, துணைத்தலைவி ஒற்றுமையாக செயல்படாததால், நிர்வாக நலன் கருதி இருவரின் செக் பவரை ரத்து செய்து, கலெக்டர் சந்திரகலா உத்தரவிட்டார். பஞ்., நிதி சார்ந்த நிர்வாகங்களை, பி.டி.ஓ., கண்காணித்து செயல்படுத்த உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை