உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / லாரி கவிழ்ந்து டிரைவர் பலி

லாரி கவிழ்ந்து டிரைவர் பலி

வாலாஜா: சாலை விபத்தில் கரூரை சேர்ந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். கரூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலுசாமி, 50; டிரைவர். இவர் நேற்று அதிகாலை பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி கர்நாடக பதிவெண் கொண்ட லாரியை ஓட்டி வந்தார். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த வன்னிவேடு அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், துாக்க கலக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேலுச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வாலாஜாபேட்டை போலீசார், வேலுச்சாமி உடலை மீட்டு, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ