உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / குளக்கரையில் முளைத்த சிலை அகற்ற சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு

குளக்கரையில் முளைத்த சிலை அகற்ற சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு

ராணிப்பேட்டை,: சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் பிரம்ம தீர்த்த குளக்க-ரையில் வைக்கப்பட்ட சிலையை அகற்ற, மக்கள் எதிர்ப்பு தெரி-வித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில், 108 திவ்ய தேசங்-களில் ஒன்றாக விளங்கும் யோக லட்சமி நரசிம்மர் கோவில், மலை மீது உள்ளது. மலை அடிவாரத்தில் பிரம்ம தீர்த்தம் உள்-ளது. இந்த தீர்த்த கரை மீது நேற்று முன்தினம் நள்ளிரவு அடை-யாளம் தெரியாத யாரோ, 15 அடி உயர சீனிவாச பெருமாள் சிலையை வைத்து சென்றுள்ளனர். இத்தகவல் நேற்று காலை அப்பகுதி மக்களிடையே பரவியது. இதையடுத்து சிலையை வழி-பட மக்கள் திரண்டனர். இதையறிந்த அறநிலையத்துறை அதிகா-ரிகள் சிலையை அகற்றுவதற்கு சென்றனர். மக்கள் மற்றும் பக்-தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திரும்பி விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை