உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / வயலில் தாழ்வாக செல்லும் மின் ஒயரால் விபத்து அபாயம்

வயலில் தாழ்வாக செல்லும் மின் ஒயரால் விபத்து அபாயம்

நெமிலி,:வயலில், தாழ்வாக செல்லும் மின் ஒயரால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியத்தில், கணபதிபுரம் கிராமம் உள்ளது. இங்கு, வயல்வெளியில் மின் ஒயர் செல்கிறது. இந்த மின் ஒயரில் இருந்து, குடியிருப்பு மற்றும் விவசாயத்திற்கு செல்லும் மின் இணைப்புகள் உள்ளன. இதில், ஒரு மின் மாற்றியில் இருந்து, மற்றொரு மின் மாற்றிக்கு செல்லும் மின் ஒயர் தாழ்வாக செல்கிறது. குறிப்பாக, தாழ்வாக செல்லும் மின் ஒயரால், வயல்வெளியில் உழவு ஓட்டும் போது, டிராக்டர் வாகனம் மின் ஒயரில் உரசும் வகையில் உள்ளது. எனவே, தாழ்வாக செல்லும் மின் ஒயரை இழுத்து கட்ட வேண்டும் என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை