உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோவில் அருகே பங்க் அமைக்க எதிர்ப்புகலெக்டர் அலுவலகம் முன் மக்கள் மறியல்

கோவில் அருகே பங்க் அமைக்க எதிர்ப்புகலெக்டர் அலுவலகம் முன் மக்கள் மறியல்

கோவில் அருகே பங்க் அமைக்க எதிர்ப்புகலெக்டர் அலுவலகம் முன் மக்கள் மறியல்சேலம்,:சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே தும்பிப்பாடி, முள்ளுசெட்டிப்பட்டி காலனி மக்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில், 'எங்கள் ஊரில் மாரியம்மன் கோவில் அருகே பெட்ரோல் பங்க் அமைக்க கூடாது' என கூறியிருந்தனர்.தொடர்ந்து பிரதான நுழைவாயிலில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில், உள்ளே - வெளியே செல்ல முடியாமல், இருபுறமும் வாகனங்கள் நின்றன. மக்களும் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். விரைந்து வந்த, சேலம் டவுன் போலீசார், பேச்சு நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், மக்கள் மறியலை கைவிட்டனர்.இதுகுறித்து மக்கள் கூறியதாவது: எங்கள் சமூகத்துக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் அருகே, பெட்ரோல் பங்க் நிறுவும் பணி நடக்கிறது. இதை எதிர்த்து ஓராண்டுக்கு முன் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. பங்க் நிறுவினால் திருவிழா காலங்களில் பட்டாசு வெடிப்பது, தீமிதி விழா போன்றவை தடைபடும். அதனால் கோவிலில் இருந்து, 300 மீட்டர் தாண்டி, பங்க் நிறுவும்படி முறையிட்டு வருகிறோம். இதுதொடர்பாக தற்போது மனு கொடுத்த போது, அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் மறியலில் ஈடுபட்டோம். போலீஸ் அறிவுரைப்படி மறியலை கைவிட்டு, அவர்கள் முன்னிலையில், மீண்டும் மனு கொடுத்துள்ளோம். தீர்வு கிடைக்காவிட்டால், நாளை(இன்று) மீண்டும் கலெக்டர் அலுவலகம் முன் மறியல் செய்வோம்.இவ்வாறு அவர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை