மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத வாகனம்மோதி மூதாட்டி படுகாயம்
07-Jan-2025
விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு வாகனம் குறித்து விசாரணைபனமரத்துப்பட்டி : நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பெரியமணலியை சேர்ந்த கூலித்தொழிலாளி கணேசன், 67. இவரது மனைவி ஜோதி, 60. இவர்களுக்கு, 3 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து, டி.வி.எஸ்., மொபட்டில், தம்பதி சேலம் நோக்கி புறப்பட்டனர். கணேசன் ஓட்டினார். இரவு, 10:30 மணிக்கு, மல்லுாரில், சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம், மொபட் பின்புறம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் காயமடைந்த கணேசன், ஜோதி, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று காலை ஜோதி உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து, மல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
07-Jan-2025