வரும் கல்வியாண்டில் ஏ.ஐ., பாடத்திட்டம் அமல்கணினி பயிற்றுனர்களை நியமிக்க வலியுறுத்தல்
வரும் கல்வியாண்டில் ஏ.ஐ., பாடத்திட்டம் அமல்கணினி பயிற்றுனர்களை நியமிக்க வலியுறுத்தல்சேலம்:தமிழகத்தில், வரும் கல்வியாண்டு முதல், ஏ.ஐ., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், கணினி ஆய்வகம் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.வரும் கல்வியாண்டு முதல், அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் நடத்துவதற்காக, ஏ.ஐ., மற்றும் கணினி அறிவியல் பாடத்திட்டம் தயாராகி வருவதாக, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும், ஹைடெக் லேப் எனும் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு, இன்டர்நெட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆறாம் வகுப்பு முதல், கணினி அறிவியல் மற்றும் ஏ.ஐ., பாடங்களின் அடிப்படையை கற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரம், பள்ளியில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு, பயிற்சி வழங்கி, கணினி பாடத்திட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.கணினி அறிவியல் பாடத்தில், பி.எட்., முடித்த ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: தமிழகத்தில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கணினி அறிவியல் பாடத்தில் பி.எட்., படித்தவர்கள் உள்ளனர். பிற மாநிலங்களில், கணினி அறிவியல் பாடத்துக்கு தனி ஆசிரியர்கள் நியமித்துள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் கணினி குறித்து கற்றுத்தர ஆசிரியர்கள் நியமிக்காமல் உள்ளனர்.வரும் கல்வியாண்டில் அமலாகும், ஏ.ஐ., பாடங்களையும், ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்து நடத்த உள்ளனர். அப்படி செய்தால், பெயரளவில் மட்டுமே இருக்குமே தவிர, மாணவர்கள் கணினி குறித்து தெரிந்து கொள்ள முடியாது. எனவே, கணினி ஆய்வகம் உள்ள அனைத்து பள்ளிகளிலும், கணினி பயிற்றுனர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.