உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மளிகை, எலக்ட்ரானிக் கடைகளில் திருட்டு

மளிகை, எலக்ட்ரானிக் கடைகளில் திருட்டு

மளிகை, எலக்ட்ரானிக் கடைகளில் திருட்டுசேலம், :சேலம், எருமாபாளையம், பெருமாள் கோவில் காட்டை சேர்ந்தவர் தனபால், 40. இவரது மனைவி, தாய் சேர்ந்து, அதே பகுதியில் உள்ள ஆத்துார் பைபாஸ் சாலையில் மளிகை கடை வைத்துள்ளனர். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, 9,000 ரூபாய், 3,000 ரூபாய் மதிப்பில், சிகரெட் பாக்கெட்டுகள் திருடுபோனது தெரிந்தது. தனபால் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.ஆத்துார், கேசவேலு தெருவில் சீனிவாசன், 55, என்பவர் எலக்ட்ரானிக் கடை வைத்துள்ளார். நேற்று காலை, கடையை திறக்கவந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, எலக்ட்ரானிக் பொருட்கள் திருடுபோனது தெரிந்தது. அதே பகுதியில் உள்ள அர்ஜூனன், 85, என்பவரது பொரிக்கடையில், 2,000 ரூபாய் திருடுபோனது. பக்கத்தில் உள்ள கண்ணன், 45, என்பவரது ஓட்டலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை