உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாடியில் இருந்து தவறி விழுந்தமாணவிக்கு காலில் காயம்

மாடியில் இருந்து தவறி விழுந்தமாணவிக்கு காலில் காயம்

கரூர்:கரூர் அருகே, தனியார் பள்ளி மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவிக்கு, காலில் காயம் ஏற்பட்டது.கரூர் மாவட்டம், ராயனுார் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த, ராஜேஷ் கண்ணா என்பவரது மகள் ஸ்ரீநிதி, 14. இவர், ஆட்சிமங்கலத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மதியம் பள்ளியின், இரண்டாவது மாடியில் இருந்து ஸ்ரீநிதி திடீரென தவறி விழுந்தார். இதனால், ஸ்ரீநிதிக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவியை பள்ளி ஊழியர்கள் மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தான்தோன்றிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை