உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் மாவட்டம் முழுவதும் கனமழை வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் சாலை மறியல்

சேலம் மாவட்டம் முழுவதும் கனமழை வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் சாலை மறியல்

சேலம்: சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை மழை பெய்ததால், பல வீடுகளில் மழை நீர் புகுந்ததால், மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்-டனர்.சேலம் மாநகராட்சி, 36வது வார்டுக்குட்பட்ட சாமி நகர் பகுதியில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், அங்குள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள், விடிய விடிய தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை ஒன்று திரண்டு, தாதம்பட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க., கவுன்சிலரு-மான யாதவமூர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுத்தார். அம்மாபேட்டை போலீசார், நக-ராட்சி அதிகாரிகள் தற்காலிகமாக மழைநீர் செல்ல நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.இதேபோல, அம்மாப்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பல்-வேறு பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம-டைந்த மக்கள் அம்மாபேட்டை பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அம்மாபேட்டை போலீசார், மாநகராட்சி அதிகா-ரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, மறியலை கைவிட்டனர்.சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்குஏற்காட்டில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால், ஓமலுார் ஒன்றியத்துக்குட்பட்ட சக்கரைசெட்டிப்பட்டி கிராமம் அருகே, குறுமிச்சங்கரடு ஏற்காடு மலை அடிவாரத்தில் அமைந்துள்ள, கிழக்கு சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்-பட்டது. வெள்ளப்பெருக்கின்போது, காமலாபுரம் பகுதியில் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகளில் குப்பை அடைத்து கொண்டதால், அதில் தண்ணீர் செல்ல முடியாமல், மர-வள்ளிக்கிழங்கு பரியிடப்பட்ட நிலங்களில் புகுந்து சேதம் ஏற்பட்-டது. சக்கரை செட்டியபட்டி கிராமத்தில் மூன்று பாலங்களிலும், காமலாபுரம் கிராமத்தில் பல்வேறு கிராமங்களிலும் பாலத்தில் அடைப்பு ஏற்பட்டது. பின் பொக்லைன் உதவியுடன் குப்பை அகற்றப்பட்டது.* மகுடஞ்சாவடி அருகே பாட்டப்பன்கோவிலில் நேற்று முன்-தினம் இரவு பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் ஆறு போல் ஓடியது. இந்நிலையில் பாட்டப்பன்நகர், கஸ்பாபட்-டியில் வசிக்கும் தறி தொழிலாளி வெங்கடாசலம், 51, அவரது மனைவி பிரியங்கா தங்கியிருந்த ஓட்டு வீடு பள்ளத்தில் இருந்-ததால் வீட்டிற்குள் மழை நீர் புகுந்ததால் அவதிப்பட்டனர்.* ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 80 மி.மீ., மழை பெய்தது. ஏற்காட்டில் இருந்து குப்பனுார் செல்லும் மலைப்பா-தையில், கொட்டசேடு கிராமத்தை அடுத்துள்ள முனியப்பன் கோவில் அருகில் உள்ள, மலைப்பாதை சாலையோரத்தில் தடுப்பு சுவர் அருகில், 15 மீட்டர் அளவிற்கு நிலச்சரிவு ஏற்பட்-டது. மேலும் மலைப்பாதையில், சிறிய அளவிலான பாறைகள் உருண்டு சாலையில் ஆங்காங்கே விழுந்துள்ளன.* கொங்கணாபுரம் பகுதியில் கனமழை பெய்தது. மொரம்பு காடு பகுதியில் உள்ள, 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்-ததால் வீடுகளை விட்டு வெளியே வரமுடியமல் மக்கள் அவதிப்-பட்டனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த பலர், சங்ககிரி - ஓ-மலுார் செல்லும் சாலையில் நேற்று காலை மறியலில் ஈடுபட்-டனர். கொங்கணாபுரம் பேரூராட்சி தலைவர் சுந்தரம், நெடுஞ்சா-லைத்துறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர், இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ