உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏரி சேற்றில் சிக்கிமூழ்கிய டிரைவர் பலி

ஏரி சேற்றில் சிக்கிமூழ்கிய டிரைவர் பலி

ஏரி சேற்றில் சிக்கிமூழ்கிய டிரைவர் பலிகெங்கவல்லி:கெங்கவல்லி அருகே நடுவலுார், வடகோடியை சேர்ந்த கணேசன் மகன் சதீஷ், 33. லாரி டிரைவரான இவர், நேற்று காலை, 10:00 மணிக்கு அதே பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்றார். 11:00 மணிக்கு பள்ளத்தில் இறங்கி மீன் பிடித்தபோது, சேற்றில் சிக்கிய அவர் கூச்சலிட்டபடி மூழ்கினார். அங்கிருந்தவர்கள், ஏரியில் இறங்கி அவரை மீட்டு, கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் கூறினர். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை