மேலும் செய்திகள்
'புத்தக வாசிப்பால் எண்ணங்கள் விசாலமாகும்'
13-Aug-2024
சேலம்: சேலம் அரசு கலைக்கல்லுாரியில் மன நல மேம்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் கலெக்டர் பிருந்-தாதேவி பேசியதாவது:மாணவ, மாணவியருக்கு தாழ்வு மனப்பான்மை எண்ணங்கள் அவ்வப்போது தோன்றும். அப்போது குணங்களை மாற்றிக்-கொண்டும், திறனை வளர்த்துக்கொள்வதன் மூலமும் மீள முடியும். நல்ல நட்பிடம் பகிர்ந்துகொள்ளும் போது தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட முடியும். வாழ்க்கை என்பது தொடர் பயணம். இதை மாணவர்கள் புரிந்து, வாழ்க்கையில் நடக்கும் கஷ்டங்கள், தோல்விகளை நம்பிக்கையுடன் எதிர்-கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இதில் சேலம் வடக்கு எம்.எல்.ஏ., ராஜேந்திரன், கல்லுாரி முதல்வர் காந்திமதி, மாவட்ட மனநல மருத்துவ திட்ட அலுவலர் விவேகானந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
13-Aug-2024