உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தமிழ் செம்மல் விருது விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ் செம்மல் விருது விண்ணப்பிக்க அழைப்பு

சேலம்: தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் ஆர்வலர்களை கண்டறிந்து ஊக்-கப்படுத்த, தமிழ் செம்மல் விருதுடன், 25,000 ரூபாய் பரிசுத்-தொகை, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வழங்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில், 2024க்கான விருதுக்கு தமிழ் ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ் வளர்ச்சித்துறையின், www.tamilvalarchithurai.tn.go.inஎன்ற வலைதளத்தில் விண்ணப்-பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.தவிர சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மண்டல தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். இதற்கு முன் தமிழ் வளர்ச்-சித்துறை சார்பில் விருதுகள் பெற்றிருக்கக்கூடாது. தாசில்தார் வழங்கும் குடியிருப்பு சான்று அல்லது ஆதார் அட்டை நகலுடன் இரு புகைப்படம், ஆற்றிய தமிழ்ப்பணி போன்ற விபரங்களை இணைக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஆக., 10க்குள் நேரில் ஒப்படைக்க கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக் கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை