உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தனியார் பஸ் டிரைவர்கள் தகராறு 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு

தனியார் பஸ் டிரைவர்கள் தகராறு 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு

ஆத்துார்: ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில், இரண்டு தனியார் பஸ் டிரை-வர்கள் இடையே 'டைமிங்' பிரச்னையில், தகராறு செய்து கொண்-டனர். இதனால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்-பட்டது.சேலம் மாவட்டம், ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, சென்னை, விழுப்புரம், பெரம்பலுார், திருச்சி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு, தினமும் 300க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று காலை, 8:30 மணியளவில், 'பாலாஜி மற்றும் பி.எம்.எஸ்.,' ஆகிய பஸ் டிரைவர்கள் செல்லதுரை, 32, சபரிராஜா, 35, ஆகியோர் இடையே 'டைமிங்' பிரச்னை காரணமாக, ஒருவ-ருக்கொருவர் வாக்குவாதம் செய்தனர்.ஒரு கட்டத்தில், பஸ்சை முன்புறமாக நிறுத்தி, இருவரும் தாக்கிக் கொண்டனர். இதனால் அரை மணி நேரத்துக்கு மேல், மற்ற பஸ்களும் செல்ல முடியாத சூழல் உருவானது. ஆத்துார் டவுன் போலீசார், தனியார் பஸ்களை அப்பு-றப்படுத்தினர். அதன்பின் மற்ற பஸ்கள், பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை