மேலும் செய்திகள்
வேங்கைவயல் வழக்கு மூவருக்கு சம்மன்
20-Feb-2025
நீதிமன்றத்தில் ஆஜராகாதவர்ஓராண்டுக்கு பின் சிக்கினார்ஆத்துார்:கெங்கவல்லி அருகே கடம்பூரை சேர்ந்தவர் வினோத், 22. கூலித்தொழிலாளியான இவர், 2023ல், கெங்கவல்லியை சேர்ந்த, 16 வயது சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம் செய்தார். கெங்கவல்லி போலீசார், குழந்தை திருமணம், போக்சோ வழக்கு பதிந்து வினோத்தை கைது செய்தனர்.இந்த வழக்கு, சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடக்கிறது. ஆனால் ஓராண்டாக, வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதனால் பிடிவாரன்ட் பிறப்பித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று, வீட்டுக்கு வந்த வினோத்தை கெங்கவல்லி போலீசார் கைது செய்து, போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
20-Feb-2025