உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சோமம்பட்டி தொடக்கப்பள்ளியில் நுாற்றாண்டு விழா கொண்டாட்டம்

சோமம்பட்டி தொடக்கப்பள்ளியில் நுாற்றாண்டு விழா கொண்டாட்டம்

சோமம்பட்டி தொடக்கப்பள்ளியில் நுாற்றாண்டு விழா கொண்டாட்டம் வாழப்பாடி:வாழப்பாடி அடுத்த சோமம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நுாற்றாண்டு விழா, 106வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். அதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, தொழில் அதிபர் கண்ணன், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க முன்னாள் துணைத்தலைவர் சுகவனேஸ்வரன், பரிசு, சான்றிதழ்களை வழங்கினர்.பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற, முன்னாள் மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி, சமூக விழிப்புணர்வு நாடகங்கள் நடந்தன. விழா ஏற்பாடுகளை, முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர். தலைமை ஆசிரியை உமாலட்சுமி, ஆசிரியை கண்ணகி, பள்ளி மேலாண் குழு தலைவி பிரபாவதி, ஊராட்சி செயலர் மகேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.இதுகுறித்து விழா குழுவினர் கூறுகையில், 'நுாற்றாண்டு முடிந்த அரசு பள்ளிகளில், நுாற்றாண்டு விழா கொண்டாட, அண்மையில் தமிழக அரசு அறிவித்தது. இதனால் முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்கள் ஒத்துழைப்புடன், 1919ல் ஆங்கிலேயர் ஆட்சியில் தொடங்கப்பட்ட இப்பள்ளியில் நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி முகப்பில் நுாற்றாண்டு நினைவு வளைவு, கல்வெட்டு அமைக்க முடிவு செய்யப்பட்டது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ