உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மர்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் பலி

கெங்கவல்லி,:கெங்கவல்லியை சேர்ந்த விவசாயிகள் வெங்கடாஜலம், 60, தனபால், 55. இவர்களுக்கு, நடுவலுாரில் தோட்டங்கள் உள்ளன. அங்கு கட்டி வைத்திருந்த, வெங்கடாஜலத்தின் இரு ஆடுகள், தனபாலின், 3 ஆடுகள், மர்ம விலங்கு கடித்ததில் உயிரிழந்தன. கெங்கவல்லி கால்நடைத்துறையினர் ஆய்வு செய்தனர். கடந்த, 12ல் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் தோட்டத்தில், 11 ஆடுகள், மர்ம விலங்கு கடித்து இறந்திருந்தது. தொடர்ந்து ஆடுகள் இறந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இதுகுறித்து கால்நடைத்துறையினர் கூறுகையில், 'ஆடுகள், தெரு நாய் கடித்து இறந்ததா, வேறு ஏதும் விலங்கு கடித்ததா என, ஆய்வு செய்கிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை