உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விநாயகா மிஷன்ஸில் நாளை பட்டமளிப்பு விழா

விநாயகா மிஷன்ஸில் நாளை பட்டமளிப்பு விழா

சேலம் : சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்க-லையின், 17-வது பட்டமளிப்பு விழா நாளை மதியம், 3:30 மணிக்கு, விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் மருத்துவ கல்லுாரியில் உள்ள அன்னபூரணா கலையரங்கில் நடக்க உள்ளது.பல்கலை நிறுவன வேந்தர் சண்முகசுந்தரம் ஆசியுடன் பல்கலை வேந்தர் கணேசன் தலைமையில் விழா நடக்கும். அறங்காவலர் அன்னபூரணி, இணை வேந்தர் சரவணன் பங்கேற்க உள்ளனர்.பல்கலை துணைத்தலைவர்களான சதீஷ்குமார், சந்திரசேகர், அனு-ராதா, இயக்குனர்கள் காமாட்சி, சுமதி, அருணாதேவி, ராமசாமி, ஜெகநாதன், விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் மருத்துவ கல்லுாரி நிர்வாக இயக்குனர்(வளாக வளர்ச்சி), கோகுல் கிருஷ்ணன் சரவணன் முன்னிலை வகிப்பர்.புதுச்சேரி ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன தலைவர் விஸ்வ மோகன் கடோச் பேச உள்ளார். பல்கலை துணைவேந்தர் சுதிர், ஆண்டறிக்கையை வாசிப்பார். பத்மஸ்ரீ விருது பெற்ற, பாலம் கல்யாணசுந்தரம், அஸ்வதி திருநள் கவுரி லட்சுமி பாய் ஆகியோருக்கு, அவர்கள் சார்ந்த துறைகளில் சிறந்த பங்களிப்புக்கு முனைவர் எனும் விருது வழங்கப்பட உள்ளது. இதில், 3,665 மாணவ, மாண-வியர், முனைவர், முதுநிலை, இளநிலை பிரிவுகளில் பட்டம் பெற உள்ளனர். விழா ஏற்பாடுகளை, பேராசிரியர் சபரிநாதன், பதிவாளர் நாகப்பன், பல்கலை அலுவலர்கள் செய்து வருகின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை