உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாநில தடகள போட்டி மாற்றுத்திறனாளி அசத்தல்

மாநில தடகள போட்டி மாற்றுத்திறனாளி அசத்தல்

சேலம்: தமிழ்நாடு செரிப்ரல் பாலிசி ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் எனும் பெருமூளை முடக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான விளை-யாட்டு மேம்பாடு சங்கம் சார்பில் மாநில தடகள போட்டி, சேலம் காந்தி மைதானத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் உமாராணி தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் பரணிதரண், செயலர் சித்தேஸ்வரன் வழிநடத்தினர்.இதில், 15 - 35 வயது வரையில், முடக்கவாதத்தால் பாதிக்கப்-பட்ட ஆண், பெண், மாற்றுத்திறனாளிகள் என, 350 பேர் பங்-கேற்றனர். 100, 200, 400, 1,500 மீ., ஓட்டம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல் போட்டிகள் தனித்தனியே நடந்-தன. ஜூனியர், சப் -ஜூனியர், சீனியர் பிரிவாக நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் தலா, 3 இடங்களை பிடித்த வீரர், வீராங்க-னைகளுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை