உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தோஷம் கழிப்பதாக 1.5 பவுன் பறிப்பு

தோஷம் கழிப்பதாக 1.5 பவுன் பறிப்பு

நங்கவள்ளி: நங்கவள்ளி, தண்ணீர் குட்டப்பட்டியை சேர்ந்தவர் மதியழகன், 28. கூலித்தொழிலாளி. இவரது மனைவி கிருத்திகா, 24.இவர் நேற்று காலை, அருகே உள்ள தாய் வீட்டில் இருந்தார். அப்-போது அங்கு வந்த மர்ம நபர், 'உனக்கும் கணவருக்கும் நேரம் சரியில்லை. அதற்கு தோஷம் கழிக்க வேண்டும்' என கூறி, வீட்டில் பூஜை செய்தார். அப்போது, உங்கள் தங்க சங்கிலியை, வெள்ளைத்துணியில் வைத்து பூஜைக்கு வைக்க வேண்டும். பூஜை முடிந்து சிறிது நேரத்துக்கு பின் எடுக்க வேண்டும் என மர்ம நபர் கூறினார். அவரும் அதன்பிடி வெள்ளைத்துணியை எடுத்தபோது, அதில் வைத்த, 1.5 பவுன் சங்கிலியை காண-வில்லை. ஆனால் அதற்குள் அவர் சென்றுவிட்டார். ஏமாற்றப்பட்-டதை உணர்ந்து நேற்று அவர் அளித்த புகார்படி, நங்கவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை