உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆண்டுக்கு ரூ.24,000 கோடியில்அடிப்படை வசதிகள் நிறைவேற்றம்

ஆண்டுக்கு ரூ.24,000 கோடியில்அடிப்படை வசதிகள் நிறைவேற்றம்

'ஆண்டுக்கு ரூ.24,000 கோடியில்அடிப்படை வசதிகள் நிறைவேற்றம்'வாழப்பாடி டவுன் பஞ்சாயத்தில், 8.70 கோடி ரூபாய் மதிப்பில், மேம்படுத்தப்பட்ட பஸ் ஸ்டாண்ட், நவீன காய்கறி சந்தையை, அமைச்சர்கள் நேரு, ராஜேந்திரன், நேற்று திறந்து வைத்தனர்.தொடர்ந்து அமைச்சர் நேரு பேசியதாவது:நகராட்சி நிர்வாகத்துறை மூலம் ஆண்டுக்கு, 24,000 கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கி, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படுகின்றன. வாழப்பாடி டவுன் பஞ்சாயத்தில், 4 ஆண்டுகளில் பல்வேறு திட்ட நிதிகளில், 19.17 கோடி ரூபாய் மதிப்பில், 70 எண்ணிக்கையிலான திட்டப்பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 61 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதி பணிகள் நடக்கின்றன. இவ்வாறு அவர் பேசினார். எம்.பி.,க்களான, கள்ளக்குறிச்சி மலையரசன், சேலம் செல்வகணபதி, கூடுதல் கலெக்டர் பொன்மணி, சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், டவுன் பஞ்சாயத்து உதவி இயக்குனர் குருராஜன், டவுன் பஞ்சாயத்து தலைவி கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை