உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தி.மு.க., அரசை கண்டித்து நாளை அ.தி.மு.க., போராட்டம்

தி.மு.க., அரசை கண்டித்து நாளை அ.தி.மு.க., போராட்டம்

சேலம், : அ.தி.மு.க.,வின், சேலம் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோ-சனை கூட்டம், புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கட்சி அலுவ-லகத்தில் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன், முன்னாள் மேயர் சவுண்டப்பன், பொருளாளர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தனர்.மாநகர் மாவட்ட செயலர் வெங்கடாஜலம் பேசியதாவது:- மின்கட்-டண உயர்வு, ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்காத தி.மு.க., அரசை கண்டித்து சேலம், கோட்டை மைதானத்தில், மாநகர் மாவட்டம் சார்பில் ஜூலை, 23(நாளை) காலை, 9:30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இதில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேச உள்ளார். அதனால், 60 வார்டு-களில் இருந்து நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இதில் பகுதி செயலர்கள் பாலு, மாரியப்பன், சரவணன், முருகன், யாதவமூர்த்தி, ஜெயபிரகாஷ், பாண்டியன், சார்பு அணி செய-லர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பல்வேறு அணியினர், கவுன்சிலர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி