உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 90 ஓவர் கிரிக்கெட் காலிறுதிக்கு சேலம் தகுதி

90 ஓவர் கிரிக்கெட் காலிறுதிக்கு சேலம் தகுதி

வீரபாண்டி: தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில், 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் கிரிக்கெட் போட்டி, 8 மண்டலங்களில் கடந்த வாரம் நடந்தது. சேலம் மண்டலம் சார்பில் சேலம், தர்மபுரி, கோவை, மயிலாடு-துறை அணிகள் மோதிய போட்டியில் சேலம், கோவை அணிகள் வெற்றி பெற்றன. அதேபோல், 8 மண்டலங்களில் வெற்றி பெற்ற, 16 அணிகள் இடையே, 90 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. சேலம், கருப்பூர் அரசு இன்ஜினியரிங் கல்லுாரி மைதானத்தில் கடந்த, 29, 30ல் நடந்த போட்டியில், சேலம் - செங்கல்பட்டு அணிகள் மோதின. அதில் செங்கல்பட்டு அணி, 90 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்தன. அடுத்து ஆடிய சேலம் அணி, 90 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு, 317 ரன்கள் எடுத்து கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. சேலம் அணி வீரர் அபினேஷ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்-பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை